ஓமான் தேசிய தினம்: 390 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கினார் ஓமான் சுல்தான்.!

Sultan pardons 390 inmates
Pic: ONA

ஓமான் நாட்டில் வரலாற்றின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றான ஓமான் தேசிய தினம் இன்று (18-11-2020) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஓமான் நாட்டில் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள பல சிறைக் கைதிகளுக்கு ஓமான் சுல்தான் MH ஹைதம் பின் தாரிக் அவர்கள் சிறப்பு மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஓமான் நாட்டின் 50வது தேசிய தினம்: கத்தார் அமீர் உள்ளிட்டோர் வாழ்த்து.!

ஓமானின் உச்ச கட்டளைத் தளபதியான சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற சிறைக் கைதிகள் குழுவுக்கு சிறப்பு மன்னிப்பு வழங்கியுள்ளார் என ராயல் ஓான் காவல்துறை (ROP) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 390 நபர்கள் என்றும் அந்த செய்திககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்களில் 150 கைதிகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என ராயல் ஓமான் காவல்துறையின் அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.

கத்தாரில் கட்டாய இடங்களில் முகக்கவசம் அணிய தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்; MOI

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தார் MoPH குறைந்த ஆபத்துள்ள 49 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

Editor

COVID-19; கத்தாரில் இன்று புதிதாக 292 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

Editor

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறிய 4 பேர் கைது‌.!

Editor