கத்தாரில் “இணையத்தமிழன்” என்னும் விருதைப் பெறும் தமிழன்..!

KareemTime

கத்தாரில் YouTube-பில் கலக்கி வரும் “கரீம்டைம்” திரு கரீம் அவர்கள் இணையத்தமிழன் என்னும் விருதிற்காக “தமிழ்மகன் அவார்ட்ஸ்” விருதுக் கமிட்டியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் திருச்சியில் பிறந்து வளர்ந்து ஓட்டுநர் பணிக்காக கத்தார் சென்ற இவர் இன்று கத்தார் அரபியர்களின் கதாநாயகனாக மாறியுள்ளார்.

அயல்நாடுகளில் தமிழர்களின் நிலை பற்றி காணொளியை வெளியிட்ட இவர் நாளடைவில் தன்னுடைய முதலாளியின் உந்துதலால் மேலும் பல நகைச்சுவையான காணொளியை பதிவிட்டு, மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கும் தன் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

நிகழ்ச்சி குறித்த விவரம் :

நாள் : ஜனவரி 10-01-2020

இடம் : Gilwana Hall, Radisson blu Hotel
தோஹா கத்தார்.

டிக்கெட் தொடர்புக்கு : +974 7039 9288

ஆன்லைன் முன்பதிவிற்கு :
https://www.q-tickets.com/Events/EventsDetails/8583/tamilmagan-awards-2020