கத்தார் நாட்டில் “இணையத்தமிழன்” என்னும் விருதைப் பெற்ற தமிழன்..!

கத்தாரில் YouTube-பில் கலக்கிவரும் கரீம்டைம் திரு கரீம் அவர்களுக்கு தமிழ்மகன் அவார்ட்ஸ் விருது கமிட்டியினரால் விருந்து வழங்க தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (10-01-2020) கத்தார் தோஹா Gilwana Hall, Radisson blu Hotel லில் நடந்த விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் திரு.கரீம் அவர்களுக்கு “இணையத்தமிழன்” என்னும் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் திருச்சியில் பிறந்து வளர்ந்து, நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட கரீம் அவர்கள் தனக்கும் தன் நாட்டிற்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார்.

இதுகுறித்து, தனது முகநூல் பக்கத்தில் கரீம் அவர்கள் இந்த விருது பெற்றமைக்கு தமிழ் உள்ளங்களுக்கும், கத்தார் மக்களுக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.