தோஹா E-Ring சாலை பாதைகளில் தற்காலிக மாற்றம்.!

Temporary change E-ring road
Pic: Ashghal

கத்தார் பொதுப்பணி ஆணையம் (Ashghal) பொது போக்குவரத்து இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து, நஜ்மா வீதிக்கும் விமான நிலைய சந்திப்புகளுக்கு இடையில் உள்ள E-Ring சாலையின் பாதைகள் வரும் (10-01-2021) ஞாயிற்றுக்கிழமை முதல் (28-01-2021) வியாழக்கிழமை வரை மூன்று பாதையிலிருந்து இரண்டு பாதைகளாகக் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.

கத்தார், அமீரகம் எல்லைகள் மூன்று ஆண்டுகளுக்கு பின் நாளை மீண்டும் திறப்பு.!

அல் துமாமாவில் (Al Thumama) மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் வலையமைப்பின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு இந்த தற்காலிக மாற்றம் குறித்து அறிவுறுத்தும் விதமாக சாலை அடையாளங்களை பொதுப்பணி ஆணையம் நிறுவும்.

சவுதி வான்வெளி வழியாக விமானங்களை இயக்க தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!

மேலும், அனைத்து சாலை பயனர்களும் வேக வரம்பைக் கடைப்பிடிக்குமாறு பொதுப்பணி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Telegram