வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: கத்தாரில் உள்ள இந்த சாலை தற்காலிகமாக மூடல்.!

Temporary road closure
Pic: Ashghal

கத்தாரில் உள்ள Umm Al Afaei Interchange மற்றும் Al Jahhaniya Intersection இடையே தோஹாவை நோக்கி செல்லும் Dukhan முக்கிய சாலை பிப்ரவரி 17 இரவு 11 மணி முதல் பிப்ரவரி அதிகாலை 4 மணி வரை தற்காலிக போக்குவரத்து மூடப்படுவதாக பொதுப்பணி ஆணையம் (Ashghal) அறிவித்துள்ளது.

பொது போக்குவரத்து இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து ITS Gantries-ஐ நிறுவுவதற்காக இந்த மூடல் மேற்கொள்ளப்படுவதாக Ashghal தெரிவித்துள்ளது.

தோஹாவில் உள்ள இந்த வீதி மூன்று மாதத்திற்கு மூடல்.!

வாகன ஓட்டிகளுக்கு இந்த மூடல் குறித்து அறிவுறுத்தும் விதமாக சாலை அடையாளங்களை பொதுப்பணி ஆணையம் நிறுவும் என்றும், அனைத்து சாலை பயனர்களும் வேக வரம்பைக் கடைப்பிடிக்குமாறு பொதுப்பணி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், கத்தார் பொதுப்பணி ஆணையம் (Ashghal) பொது போக்குவரத்து இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து, Al Arab வீதிக்கும் B-Ring சாலைக்கும் இடையில் உள்ள Ibn Dirham வீதியின் இரு திசைகளும் வருகின்ற (13-02-2021) சனிக்கிழமை முதல் மூன்று மாதத்திற்கு மூடுப்படுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கத்தார் வரும் பயணிகளின் கவனத்திற்கு: இனி தனிமைப்படுத்தல் கட்டாயம்.!