கத்தாரில் தனியார் துறைகளுக்கான ஈத்-அல்-பித்ர் விடுமுறை நாட்கள் அறிவிப்பு.!

கத்தாரில் தனியார் துறைகளுக்கு ஈத்-அல்-பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு, மூன்று நாள்கள் முழு ஊதிய விடுமுறையை வழங்க வேண்டும் என கத்தார் நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (ADLSA) அறிவித்துள்ளது.

கத்தாரில், நோன்பு பெருநாளை முன்னிட்டு, விடுமுறை தினங்கள் அறிவிப்பு.!

மேலும், அமைச்சகம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, சமூக இடைவெளி,
பணியாளர்களுக்கிடையில்
இடைவெளி, முகக்கவசம் மற்றும் கையுறை அணிதல் போன்ற அம்சங்களைப் பின்பற்றும் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.