கத்தாரில் புதிதாக மூன்று பூங்காக்கள் திறப்பு..!

Three new parks open in Qatar for public.

கத்தார் நாட்டில் தேசிய விளையாட்டு தினம் பல இடங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனை முன்னிட்டு, கத்தாரில் The Supreme Committee for Delivery & Legacy (SC) மூன்று புதிய பூங்காக்களை பொதுமக்கள் உபயோகிக்கும் வகையில் திறந்துள்ளது.

இந்த பூங்காக்கள் அல் பேட் ஸ்டேடியம் (Al Bayt Stadium), அல் ஜானூப் ஸ்டேடியம் (Al Janoub Stadium) மற்றும் வெஸ்ட் பே (west bay) அருகே ஒனாய்சாவில் (onaiza) உள்ள பழைய அல் எர்சல் ஸ்டேஷன் பயிற்சி தளங்கள் கிளஸ்டரில் (old Al Ersal Station training sites cluster) அமைந்துள்ளதாக சுப்ரீம் கொமிட்டீ (SC) தெரிவித்துள்ளது.

இந்த மூன்று பூங்காக்களிலும் டென்னிஸ், கூடைப்பந்து விளையாட்டுகள் மற்றும் சிறுவர்களுக்கான பிரத்தியேக விளையாட்டுப் பகுதிகள், ஜாகிங், சைக்கிள் ஓடுபாதைகள் மற்றும் திறந்த வெளி உடற்பயிற்சி உபகரணங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து SC பொதுச்செயலாளர் ஹசன் அல் தவாடி கூறுகையில் :

எங்கள் நாட்டின் தேசிய விளையாட்டு தினத்தில் மூன்று பொது பூங்காக்களை திறப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த வசதிகள் உள்ளூர் சமூகங்களின் ஓய்வு நேரங்களை திறந்த வெளியில் வழங்குவதன் மூலம் உயர்த்தும் என்றும், கத்தாரில் நடைபெற இருக்கும் 2022 FIFA கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முன்னதாகவே இந்த பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என கூறினார்.