கத்தாரில் இன்று பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

Thundershowers and strong Winds
Pic: Gulf-Times

கத்தார் வானிலை ஆய்வுத்துறை அதன் தினசரி வானிலை அறிக்கையில், இன்று (28-10-2020) சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில நேரங்களில் தூசி காற்று வீசும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும், கடற்கரைக்கு அருகில் மாலை 6 மணி வரை வானிலை மங்கலாக இருக்கும்.

சிதறிய மேகங்கள் மற்றும் மழையின் வாய்ப்புடன் ஒப்பீட்டளவில் வெப்பமான பகல்நேரமாக மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அமிரி திவானின் முதல்வரை நியமனம் செய்தார் கத்தார் அமீர்.!

காற்று முதலில் கடற்கரைக்கு அருகில் 5 கிலோ மீட்டர்க்கு குறைவாக வீசும் என்றும், வடமேற்கு முதல் வடகிழக்கு திசையை நோக்கி 5 முதல் 15 கிலோமீட்டர் வேகத்தை அடையும் என்றும், இடியுடன் கூடிய மழையின் போது 28 கிலோமீட்டர் வேகத்தை எடக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…