கத்தாரில் இன்று பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

Thundershowers and strong Winds
Pic: Gulf-Times

கத்தாரில் கடலோரப் பகுதிகளில் இன்று (24-07-2020) வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) தெரிவித்துள்ளது.

நாட்டின் மேற்குப் பகுதிகளில் சில மேகங்களுடன் பகல் நேரத்தில் வெப்பமாக இருக்கும் என்றும், இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், கடல் பகுதிகள் (Offshore areas) மேகமூட்டமாகவும், பனிமூட்டமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் 15 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் இன்று குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 33 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.