மேற்கு நைஜரில் ஒரே நேரத்தில் இரண்டு தாக்குதல்: கத்தார் கடும் கண்டனம்.!

two attacks Niger
Pic: Getty Images

ஆப்பிரிக்க நாடான மேற்கு நைஜரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கு நைஜரில் இரண்டு கிராமங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த இரண்டு தாக்குதல்களுக்கு கத்தார் அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

கத்தாரில் COVID-19 தடுப்பூசியின் இரண்டாம் தொகுதியை பெற நடவடிக்கை.!

வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நிராகரிப்பதில் கத்தாரில் உறுதியான நிலைப்பாட்டை கத்தார் வெளியுறவு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக இன்று (03-01-20201) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதலில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், நைஜர் அரசாங்கத்திற்கும் மற்றும் மக்களுக்கும் கத்தார் இரங்கலைத் கூறியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

ஏடன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: கத்தார் கடும் கண்டனம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…