கொரோனா விதிமீறல்: கத்தாரில் மேலும் இரண்டு வணிகங்களை இழுத்து மூடியது அமைச்சகம்.!

Two businesses temporarily closed
Pic: MOCI

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்காத இரண்டு வணிகங்களை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MoCI) தற்காலிகமாக மூடியுள்ளது.

இந்த வணிகங்கள் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றும், கடைகளுக்கான பொதுவான மற்றும் சிறப்பு தேவைகளை கடைபிடிக்கவில்லை என்றும் அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் கூறியுள்ளது.

கத்தாரில் இந்த வார வானிலை நிலவரம்.!

தற்போதைய நிலைமை மாற்றப்பட்டு அபராதம் செலுத்தப்படும் வரை இந்த வணிகங்கள் மூடப்படும் என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சத்தால் மூடப்பட்டுள்ள இரண்டு வணிகங்கள்:

  • Umm Lekhba பகுதியில் உள்ள Oriental Spa.
  • தொழில்துறை பகுதியில் உள்ள Fast Fitness Gym Center.

கொரோனா விதிமீறல்; கத்தாரில் மூன்று கடைகளை மூடியது அமைச்சகம்.!