கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் இருவர் கைது‌.!

Two more arrested for violating home quarantine rules
Pic: File/AFP

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக மேலும் இரண்டு நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (11-09-2020) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் அல் ஷீஹானியாவில் கிருமிநாசினி தெளிக்கும் பணி..!

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:

  1. Talal Saif Salem Saif Al Jeseman
  2. Ahmed Jassim Mohammed Al Jaham Al Kuwari

இதையும் படிங்க: COVID-19: கத்தாரில் இன்று ‌(செப் 12) புதிதாக 236 பேர் பாதிப்பு.!

முன்னதாக, கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளளை மீறியதற்காக கடந்த புதன்கிழமை அன்று 5 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

காசாவில் தனிமைப்படுத்தப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு தொடர்ந்து உதவி வழங்கும் கத்தார்.!

Editor

கத்தார் தேசிய விளையாட்டு தினத்தில், 33 கி.மீ ஒலிம்பிக் சைக்கிள் பாதை திறப்பு..!

Editor

COVID-19; கத்தாரில் இதுவரை 2,070 நபர்கள் குணமடைந்துள்ளனர்.!

Editor