கத்தார், அமீரகம் எல்லைகள் மூன்று ஆண்டுகளுக்கு பின் நாளை மீண்டும் திறப்பு.!

UAE reopen entry points
Pics: DMO/Amiri Diwan

சவுதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை (05-01-2021) அன்று நடைபெற்ற 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டிற்கு பின்னர், ஊடகங்களுக்கு உரையாற்றிய சவுதி வெளியுறவு அமைச்சர் விமானங்களை தொடங்குவது உட்பட கத்தார் நாட்டுடனான உறவை மீட்டெடுக்க நான்கு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தார் உடனான உறவை முழுமையாக மீட்டெடுக்க ஒப்புக்கொண்டுள்ளன.

சவுதி வான்வெளி வழியாக விமானங்களை இயக்க தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!

இந்த முடிவின் அடிப்படையில், கத்தார் நாட்டுடன் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஒரு வாரத்திற்குள் மீண்டும் தொடங்கப்படலாம் என ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் Dr. அன்வர் கர்காஷ் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமீரகம் மற்றும் கத்தார் இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகளை நாளை (09-01-2021) முதல் மீண்டும் திறக்கப்படும் என அமீரக செய்தி நிறுவனம் (WAM) இன்று (08-01-2021) அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா அல் உலாவில் நடைபெற்ற GCC உச்சி மாநாட்டின்போது வளைகுடா தலைவர்கள் அல் உலா ஒற்றுமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையடுத்து, இந்த புதிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கத்தார் உடனான உறவை மீட்டெடுக்க அமீரகம் ஒப்புதல்; வர்த்தகம், போக்குவரத்துக்கு விரைவில் அனுமதி.!

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…