கத்தார் அனுப்பிய அவசர மருத்துவ உதவிகள் உக்ரைனுக்கு வந்தடைந்தது.!

கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு தீர்வு காண உக்ரைனின் முயற்சிகளுக்கு ஆதரவாக, கத்தார் அபிவிருத்திக்கான நிதியம் (QFFD) மூலம் வழங்கப்பட்ட அவசர மருத்துவ உதவிகளை கொண்ட ஒரு சரக்கு விமானம் உக்ரைனுக்கு வந்தடைந்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் (QNA) தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அவசர மருத்துவ உதவியை உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் Dmytro Kuleba மற்றும் கத்தார் உக்ரைனுக்கான தூதர் Hadi bin Nasser al-Hajri ஆகியோர் பெற்றனர்.

Source : The Peninsula Qatar