கத்தாரில் வேக கேமராவை உடைக்க முயன்ற நபர் கைது.!

vandalizing speed camera
Pic: Shutterstock

கத்தார் தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள பேர்ல் கத்தார் (Pearl-Qatar) பகுதியில் ஒருவர் வேக கேமராக்களில் ஒன்றை உடைக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனையடுத்து, கேமராவை உடைக்க முயற்சித்த அந்த நபரை உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கைது செய்தனர்.

சவுதியில் சர்வதேச விமானப் போக்குவரத்து ஒருவாரம் ரத்து – காரணம் என்ன.?

மேலும், இதனை வீடியோவை எடுத்த நபரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர், இந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் ட்விட்டரில், வேக கேமராவை உடைக்க முயன்ற நபரையும், அதனை வீடியோவை எடுத்த நபரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்றும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

கத்தாரில் 5வது அறுவடை திருவிழா நாளை மறுநாள் தொடக்கம்.!

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…