கத்தாரிலிருந்து ஆகஸ்ட் 16 முதல் 30 வரை இந்தியாவிற்கு செல்லும் விமானங்கள் அறிவிப்பு.!

Air India express flight
Pic: Air India Express

வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் விமானங்களின் புதுப்பிப்பு அட்டவணையை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம்‌ ட்வீட் செய்துள்ளது.

கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் புதுப்பிப்பு விமானங்களின் அட்டவணைப்படி, ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் WOQOD புதிய பெட்ரோல் நிலையம் மற்றும் FAHES சோதனை மையத்தை திறந்துள்ளது.! 

கத்தாரில் இருந்து ஆகஸ்ட் 30ம் தேதி வரையிலும் மொத்தம் 16 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதில், தமிழகத்திற்கு மூன்று விமானம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று விமானங்களில் வரும் ஆகஸ்ட் 22, 30 தேதிகளில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இரண்டு விமானமும், ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானமும்‌ இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பெய்ரூட் வெடி விபத்து; கத்தார் ஏர்வேஸ் 45 டன் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.!

மேலும், இந்தியாவுக்கு செல்லும் இந்த விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pic : Air India Express

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter https://twitter.com/qatartms

? Telegram https://t.me/tamilmicsetqatar

? Instagram https://www.instagram.com/qatartms/