VBM 6ம் கட்டம்: ஓமானில் இருந்து இந்தியா செல்லும் கூடுதல் விமானங்கள் அறிவிப்பு.!

Air India express Flight schedule between india and Qatar
Pic: Twitter/India In Oman

வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டமாக ஓமான் நாட்டிலிருந்து இந்தியா செல்லும் கூடுதல் விமானங்களின் பட்டியலை ஓமானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

ஓமானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள கூடுதல் விமானங்களின் அட்டவணைப்படி, செப்டம்பர் 14ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிற்கு 25 விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா செல்லவிருக்கும் இந்த 25 விமானங்களில், 5 விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தோஹா மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் 300 பேருந்து நிறுத்தங்கள் தயாரிக்கும் பணி..!

இந்த ஐந்து விமானங்களில், மூன்று விமானம் செப்டம்பர் 16, 23, 30 ஆகிய தேதிகளில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கும், இரண்டு விமானம், செப்டம்பர் 17, 24 ஆகிய தேதிகளில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கும் இயக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: கத்தார் Al Jumailia-வில் நேற்று மணல் புயலுடன் கூடிய மழை..!!

மேலும், இந்த விமானங்களின் பயணிக்க விரும்புபவர்கள் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள docs.google.com எனும்
ஆன்லைன் படிவத்தில், தங்களது விபரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும், படிவத்தை
சமர்ப்பித்தவர்கள் ஓமானில் உள்ள Ruwi மற்றும் Wattaya போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய ஏர் இந்தியா அலுவலகத்தை அணுகி டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.