கத்தாரில் இந்த உத்தரவை மீறினால் QR 1,000 அபராதம்.!

Vehicle violations fine
Pic : Gulf-Times

கத்தாரில் ஒரு வாகனத்தில் டிரைவர் உட்பட நான்கு பேருக்கு மேல் செல்ல அனுமதியில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் குறைந்தபட்சம் QR 1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று மூலதன பாதுகாப்பு நிர்வாகத்தின் உதவி இயக்குநர் Lt Col Saqr Khamis al-Kubaisi தெரிவித்துள்ளார்.

கத்தாரில் இந்த பகுதியில் புதிய பெட்ரோல் நிலையம் திறப்பு.!

உள்துறை அமைச்சகத்தின் மக்கள் தொடர்புத் துறையின் ஒத்துழைப்புடன், மூலதன பாதுகாப்பு நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் விழிப்புணர்வு கருத்தரங்கில் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்று மூலதன பாதுகாப்பு நிர்வாகத்தின் உதவி இயக்குநர் al-Kubaisi சுட்டிக்காட்டியுள்ளார்.

கத்தாரில் நாளை நிறைவடையும் 5வது அறுவடை விழா.!

இந்த கருத்தரங்கில், தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு COVID-19 க்கு எதிரான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இந்த கருத்தரங்கில் முகக்கவசம் அணிய தவறியது, Ehteraz பயன்பாட்டைப் பதிவிறக்கத் தவறியது மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலின் தேவைகளை மீறுதல் ஆகியவற்றுக்கான தண்டனை குறித்து கையாண்டுள்ளது என மூலதன பாதுகாப்பு நிர்வாகத்தின் உதவி இயக்குநர் al-Kubaisi விளக்கியுள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…