கொரோனா விதிமீறல்: கத்தாரில் இன்று ஒரே நாளில் 194 பேர் மீது நடவடிக்கை.!

Corona update Qatar nov14
Pic: The Peninsula Qatar

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கத்தாரில் இன்று (23-11-2020) முகக்கவசம் அணிய தவறிய 169 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

கத்தாரில் உள்ள பண்ணையில் முதன் முறையாக பூத்து குலுங்கும் குங்குமப்பூ.!

ஒரு வாகனத்தில் டிரைவர் உட்பட நான்கு பேருக்கு மேல் செல்ல அனுமதியில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை மீறி செயல்பட்ட காரணத்தால் 25 பேர் மீது அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கத்தாரில் இதுவரை முகக்கவசம் அணிய தவறியதற்காக 1,519 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 98 நபர்களையும் அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

கத்தார் தொழில்துறை பகுதியில் புதிய மேம்படுத்தும் பணி தொடக்கம்.!

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…