கத்தாரில் COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறிய 130 பேர் மீது நடவடிக்கை.!

Qatar allows foreigners to own properties in more areas
Pic: Qatar Day

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கத்தாரில் இன்று (15-11-2020) முகக்கவசம் அணிய தவறிய 130 பேரை உள்துறை அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் இருவர் கைது‌.!

ஒரு வாகனத்தில் டிரைவர் உட்பட நான்கு பேருக்கு மேல் செல்ல அனுமதியில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை மீறி செயல்பட்ட ஐந்து பேர் மீது அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது வரை முகக்கவசம் அணிய தவறிய 550 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 28 நபர்களையும் அதிகாரிகள் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளனர்.

கத்தார் Al Muraikh-ல் உள்ள இந்த தெரு ஒரு வருட காலத்திற்கு மூடல்.!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…