கத்தாரில் கொரோனா விழிப்புணர்வு வாகனங்கள்.!

Virus awareness on wheels.

கத்தார் கலாச்சார மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்கான மையம், பல்வேறு மொழிகளில், கொரோனா வைரஸ் நோய் (COVID-19) அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட பத்து வாகனங்களை வெவ்வேறு பகுதிகளில் நிறுத்தும் என்று தனது, ட்வீட்டர் பதிவில் கூறியுள்ளது.

மேலும், கத்தார் கலாச்சார மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ், கத்தார் கலாச்சார மற்றும் பாரம்பரிய நிகழ்வுகள் மையம் 10 வாகனங்களை ஒதுக்கியுள்ளது என்றும், இது வெளிநாட்டு முகவர் மற்றும் ஒளிபரப்பாளர்களின் ஒத்துழைப்புடன் செயல்படும் என்றும் கூறியுள்ளது.