இஸ்லாத்திற்கு எதிரான விரோதப்போக்கு பொருளாதார உறவுகளில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்; Qatar chamber எச்சரிக்கை.!

warns Qatar Chamber

முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்து, முஸ்லிம்களின் உணர்வுகளைத் தொடர்ந்து தூண்டிவிடுவதற்கு எதிராக கத்தார் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (Qatar Chamber of Commerce and Industry) கண்டனம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான விரோத அலைகள், சகிப்புத்தன்மையின் மதிப்புகளுக்கு முரணான ஒன்று என கத்தார் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் குளிர்கால காய்கறி சந்தைகள் இன்று முதல் தொடக்கம்.!

இஸ்லாம் மதம் மீதான இந்த விரோதப்போக்கு வணிக மற்றும் பொருளாதார உறவுகளில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று Qatar Chamber எச்சரித்துள்ளது.

மேலும், முஹம்மது நபியை புண்படுத்துவது உலகெங்கிலும் உள்ள இரண்டு பில்லியன் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்கு சமம் என்றும், இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் Qatar Chamber கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் பல்கலைக்கழகம் பிரெஞ்சு கலாச்சார வார நிகழ்வை ஒத்திவைத்தது.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…