கத்தாரில் குளிர்கால காய்கறி சந்தைகள் இன்று முதல் தொடக்கம்.!

winter markets open
Pic: The Peninsula Qatar

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த பருவத்திற்கான குளிர்கால காய்கறி சந்தைகள் இன்று (29-10-2020) முதல் திறக்கப்படும் என முன்னதாக அறிவித்திருந்தது.

அக்டோபர் 29 முதல் ஒவ்வொரு வார இறுதியிலும், காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளூர் பண்ணைகளிலிருந்து வரும் புதிய காய்கறிகள் ஐந்து உள்ளூர் உற்பத்தி முற்றங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று அமைச்சகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா, கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகள் மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிப்பு.!

கடந்த சீசனில், சுமார் 16,000 டன் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக Al Sheehaniya, Al Mazrouha, Al Wakrah, Al Khor Al Zakhira மற்றும் Al Shamal ஆகிய இடங்களில் இந்த குளிர்கால சந்தைகள் இயங்கின.

குளிர்கால காய்கறி சந்தைகள் 2020-21 சீசனில் 150 உள்ளுர் பண்ணைகளின் உதவிவுடன் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தைகளில் தக்காளி, வெள்ளரி, கத்தரிக்காய் மற்றும் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று வேளாண் விவகாரத்துறையின் வேளாண் சேவைகள் மற்றும் வழிகாட்டுதல் பிரிவின் தலைவர் Ahmad Salim Al Yafai கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கத்தார் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்த நிகழ்வுகள் ரத்து.!

குளிர்கால காய்கறி சந்தைகள் அமைந்துள்ள ஐந்து இடங்கள்:

  • Al Mazrouha Market
  • Al Khor Al Zakhira
  • Al Wakrah
  • Al Shamal
  • Al Sheehaniya

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…