கத்தார் WOQOD புதிய பெட்ரோல் நிலையத்தை திறந்துள்ளது.!

Woqod new petrol station
Pic: WOQOD

கத்தார் எரிபொருள் (WOQOD) புதிதாக தனது 107வது பெட்ரோல் நிலையத்தை Al Mearad-4 பகுதியில் திறந்துள்ளது.

இதுகுறித்து, WOQOD நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான Saad Rashid Al Muhannadi அவர்கள் கூறுகையில், Al Mearad-4 பகுதியில் புதிய பெட்ரோல் நிலையத்தை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், பெட்ரோலிய பொருட்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்கும் இலக்கை அடைவதற்கும் WOQOD நாட்டில் தனது பெட்ரோல் நிலைய வலையமைப்பை விரிவுபடுத்த விரும்புகிறது என்றார்.

மெக்ஸிகோ மக்களுக்கு உதவிகள் வழங்கிய கத்தார் தூதரகம்.!

இந்த புதிய பெட்ரோல் நிலையமானது, 8,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது என்றும், இது Al Mearad பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறத்திற்கு சேவை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் நிலையம் மூலம் கீழ்க்கண்ட சேவைகளைப் பெறலாம்:

  • 24 மணி நேரமும் சேவை.
  • Sidra கடை சேவை.
  • LPG சிலிண்டர்கள் (SHAFAF) விற்பனை.
  • இலகுரக வாகனங்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் விற்பனை.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…