கத்தாரில் ஜூன் 15 முதல் மசூதிகள் மீண்டும் திறப்பு; பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் வெளியீடு.!

Image Credits: The Peninsula

COVID-19 பரவலை தடுப்பதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து சில விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ், ஜூன் 15ம் தேதி முதல் மசூதிகளை மீண்டும் திறப்பதாக Awqaf மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

கீழே உள்ள வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி, ஜூன் 15 முதல் மசூதிகள் மீண்டும் திறக்கப்படும் (வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர) மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மசூதிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சகம் ட்வீட்டில் கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை தொழுகை ஆகஸ்ட் மாதம் மூன்றாம் கட்டத்திலிருந்து 54 மசூதிகளில் நடத்த அனுமதிக்கப்படும் என்றும், செப்டம்பர் மாதம் நான்காம் கட்டத்தில், மசூதிகள் முழுமையாக திறக்கப்படும் என்றும், ஜும்ஆ தொழுகைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிப்பாட்டாளர்கள் பின்பற்றபட வேண்டிய விதிமுறைகள்:

தடுப்பு நடவடிக்கைகளின்படி, வழிப்பாட்டாளர்கள் மசூதிக்களுக்கு செல்வதற்கு முன்பு வீட்டிலேயே தொழுவதற்கு முன் செய்யக்கூடிய உடல் சுத்தம் (ஒழு) செய்ய வேண்டும். ஏனெனில், மசூதிகளின் குளியலறைகள் மற்றும் உடல் சுத்தம் செய்யும் அறைகள் மூடப்பட்டிருக்கும்‌.

பிரார்த்தனை அழைப்புகள் (பாங்கு) மூலம் மட்டுமே மசூதிகள் திறக்கப்படும் என்பதால், வழிப்பாட்டாளர்கள் முன்னதாக மசூதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் மசூதிக்குள் கூட்டமாக இருக்கக்கூடாது, மற்றவர்களிடமிருந்து இரண்டு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும்.

வழிப்பாட்டாளர்கள் கையுறைகளை அணிந்தாலும் பிறரிடம் கை குலுக்கலை தவிர்க்க வேண்டும். தும்மும்போதும், ​​இருமும்போதும் வாய் மற்றும் மூக்கை மறைக்க வேண்டும். மேலும், அவர்கள் மசூதிகளுக்குள் நுழைவதற்கு முன்பு EHTERAZ பயன்பாட்டைக் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது.

வழிப்பாட்டாளர்கள் மசூதிக்குள் வரும் முன் தங்கள் தொழுகை விரிப்பை கொண்டு வர வேண்டும், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ ​​அல்லது மசூதியில் விட்டுச் செல்லவோ கூடாது. அவர்கள் மசூதிகளில் இருக்கும் வரை முகக்கவசம் அணிய வேண்டும். வழிப்பட்டாளர்கள் தங்கள் சொந்த புனித குர்ஆனை கொண்டு வர வேண்டும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ ​​அல்லது மொபைல் போனில் படிக்கவோ கூடாது எனவும் கூறப்பட்டுள்ள‌து.

Source: The Peninsula Qatar