கத்தாரில் மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அதிகரிப்பு..!

Qatar Fuel Prices March
Pic: The Peninsula

கத்தார் பெட்ரோலியம் மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலைகளை நேற்று (28-02-2021) அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட, மார்ச் மாதத்தில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளது.

புதிய விலைப்பட்டியலின் படி, மார்ச் 01 முதல் பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு QR 1.60 ரியால்களாக விற்பனையாகும். இது ஜனவரி மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 15 திர்ஹம்கள் அதிகமாகும்.

கத்தாரில் நேற்று ஒரே நாளில் 609 பேர் மீது நடவடிக்கை.!

சூப்பர் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு QR 1.65 ரியால்களுக்கு விற்பனையாகும்‌. இது டிசம்பர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 15 திர்ஹம்கள் அதிகமாகும்.

மேலும், ஒரு லிட்டர் டீசல் QR 1.60 ரியால்களுக்கு விற்பனையாக உள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 15 திர்ஹம்கள் அதிகமானதாகும்.

கத்தாரின் இந்த பகுதியில் புதிய பெட்ரோல் நிலையம் திறப்பு.!

Pic: iloveqatar.net