கத்தாரில் இருந்து இலங்கைக்கு சிறப்பு விமானம் அறிவிப்பு..!

Srilankan community development Forum arrange special flight on Qatar To Srilanka
Pic: FB/Srilankan Airlines

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கே அழைத்து செல்லும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை இலங்கை அரசானது தற்பொழுது மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், இலங்கைக்கு பயணிக்க விரும்புவர்களுக்காக ஸ்ரீலங்கா சமூக மேம்பாட்டு மன்றம் (CDF Qatar) ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து இலங்கைக்கு ஒரு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் 389 இலங்கையர்கள் தாயகம் சென்றடைந்தனர்.!

கத்தாரில் இருந்து இலங்கைக்கு செல்லும் இந்த விமானத்தில் பயணிக்க மொத்த செலவு கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியிருக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

• விமான பயண சீட்டு.

• இலங்கையில் 2 PCR பரிசோதனைகள்.

• விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கான போக்குவரத்து.

• உணவு வசதிகளுடன் 14 நாட்கள் ஹோட்டல்.

மேலும், கட்டணங்கள் நேரடியாக ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கே செலுத்தப்படவேண்டும் என்றும், பயண செலவுகள் தனி அறை அல்லது பகிரப்பட்ட அறை மற்றும் வயது வந்தோர், குழந்தைகள் அல்லது கைக்குழந்தைகள் என்பவற்றை பொறுத்து மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பதிவு மற்றும் விபரங்களுக்கு 66601040 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொள்ளவும்.

Please join in one of this WhatsApp groups to know more about the Charter Flight to Sri Lanka from Qatar. https://chat.whatsapp.com/FAXnc8vdzhu2Reu59Swcmo??CDF©️??MEDIA

Posted by Sri Lankan Community Development Forum – Qatar on Friday, August 21, 2020

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar /

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/