சவுதி பட்டத்து இளவரசருடன் கத்தார் அமீர் உரையாடல்.!

Saudi Arabian Crown Prince
Pic: @_q6.0

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (28-02-2021) சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் HRH முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்சவுத் அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இந்த உரையாடலில், சவுதி இளவரசரின் உடல்நலம் குறித்து கத்தார் அமீர் அவர்கள் நலம் விசாரித்தார், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றும், சவுதி மக்கள் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் செழிப்படைய விரும்புவதாக கத்தார் அமீர் அறிக்கையில் தெரிவித்தார்.

கத்தாரில் மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அதிகரிப்பு..!

மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர், கூட்டு அரபு மற்றும் வளைகுடா நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான அவர்களின் ஆர்வத்தை காட்டினர்.

சவுதி அரேபியாவின் அரசு மற்றும் மக்களுக்கு கத்தார் அரசு அளித்த உறுதியான ஆதரவையும், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் இறையாண்மையை மேம்படுத்தும் அனைத்தையும் கத்தார் அமீர் அவர்கள் உறுதிப்படுத்தினார்.

கத்தார் அமீருக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார் குவைத் அமீர்.!