கத்தாரில் இன்று முதல் கட்டாரா பாரம்பரிய தோவ் விழா தொடக்கம்.!

Katara Traditional Dhow Festival
Pic: Katara

கத்தாரில் இன்று (01-12-2020) செவ்வாய்க்கிழமை முதல் பாரம்பரியமான தோவ் (கப்பல்) விழாவின் 10வது பதிப்பு குவைத், ஓமான், ஈராக் மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த தோவ் (கப்பல்) விழா தொடங்குவதற்கு முன்பே, கத்தார் பார்வையாளர்கள் விழா என்வென்று ஆர்வமாக இருந்தனர்.

கத்தாரில் அடுத்த கல்வியாண்டில் இரண்டு புதிய இந்திய பள்ளிகள்.!

இந்த விழாவில் போட்டிகள், கடல் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

மேலும், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கப்பல் கட்டும் செயல்முறை மற்றும் பண்டைய கைவினைப் பொருட்களைக் காண்பிக்கும் பட்டறைகள் விழாவில் இடம்பெற்றன.

தோவ் விழாவின் அனைத்து நாட்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் Omani Folk Band கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா: 110 அப்பாவி மக்கள் கொடூர கொலை – கத்தார் கடும் கண்டனம்.!

இந்த தோவ் (கப்பல்) விழா இன்று பிற்பகல் தொடங்குவதை அடுத்து, பிற்பகல் 3.30 மணிக்கு கடற்கரைக்கு பார்வையாளர்கள் வந்தனர்.

கத்தார் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாரம்பரியமான தோவ் விழா நடைபெறும் என கத்தார் பொது மேலாளர் Dr. Khalid bin Ibrahim al-Sulaiti கூறியுள்ளார்.

இந்த விழாவானது, இன்று பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை, புதன் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும், வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் இரவு 11 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் ATM-ல் பணம் எடுக்க கட்டுப்பாடு என்ற தகவல் போலியானது; மத்திய வங்கி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…