கத்தாரில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம், வேலையை மாற்ற NOC தேவையில்லை.!

Qatar sets minimum wage, removes NOC for changing jobs
Pic: AFP/Getty Images

கத்தாரில் முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (ADLSA) குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்தியதுடன், ஊழியர்களுக்கான வேலைகளை மாற்றுவதற்கான NOC தேவையை நீக்கியுள்ளது.

அதன்படி, தொழிலாளர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பான 2020ஆம் ஆண்டின் 17ம் இலக்கச் சட்டத்தின்படி, வீட்டுத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ஒரு மாதத்திற்கு QAR 1,000 ரியால் அடிப்படை ஊதியமாக நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா, கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகள் மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிப்பு..!

மேலும், முதலாளி ஏற்கனவே பணியாளர் அல்லது வீட்டுப் பணியாளருக்கு போதுமான உணவு அல்லது தங்குமிடங்களை வழங்காவிட்டால், விடுதி செலவுகளுக்காக முதலாளியால் மாதத்திற்கு QR 500 ரியால் மற்றும் உணவுக்காக மாதத்திற்கு QR 300 ரியால் கொடுக்க வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தால் நிறுவப்பட்ட அடிப்படை ஊதிய தொகையை விட குறைந்த அடிப்படை ஊதிய தொகையை பெரும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை புதுப்பித்து நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் முதலாளிகளுடன் இணைந்து செயல்படும் என்றும், இது அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் (gazette) வெளியிடப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்‌ என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் 30 சதவீத திறனுடன் பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகள் தொடக்கம்.!

இந்த விஷயத்தை பரிசீலிக்க கத்தாரில் தொடர்புடைய அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு தேசிய குழுவுடன் விரிவான ஆலோசனையைத் தொடர்ந்து குறைந்தபட்ச ஊதியம் முடிவு செய்யப்பட்டது. இந்த சட்டம் மத்திய கிழக்கில் முதல் முறையாகும் மற்றும் கத்தாரில் தொழிலாளர் சந்தையில் கூடுதல் நிலைத்தன்மையை வழங்கும்.

மேலும், ஊதிய பாதுகாப்பு முறையின் செயல்திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, தொழிலாளர் சட்டத்தின் புதிய திருத்தங்கள், தொழிலாளர்களின் ஊதியத்தை செலுத்தத் தவறும் முதலாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram