கத்தார் அமீருக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார் குவைத் அமீர்.!

Amir receives written message
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று முன்தினம் ‌(26-02-2021) குவைத் அமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ செய்தியை பெற்றார்.

இரு சகோதர நாடுகளுக்கிடையேயான ஆழ்ந்த சகோதர உறவுகள், அவற்றை ஆதரிப்பதற்கு உண்டான வழிகள் மற்றும் பொதுவான நலன்களின் பிரச்சினைகள் குறித்து இந்த எழுத்துப்பூர்வ செய்தியில் இடம்பெற்றிருந்தது.

கத்தாருக்குள் கடத்த முயன்ற 6,868 தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் பறிமுதல்.!

குவைத் அமீர் அவர்கள் அனுப்பிய இந்த எழுத்துப்பூர்வ செய்தியை குவைத் வெளியுறவு அமைச்சர் Sheikh Dr Ahmed Nasser al-Mohamed al-Sabah அவர்கள் அமிரி திவான் அலுவலகத்தில் கத்தார் அமீருடனான சந்திப்பின் போது வழங்கினார்.

இந்த சந்திப்பின் ஆரம்பத்தில், குவைத் வெளியுறவு அமைச்சர் குவைத் அமீரின் வாழ்த்துக்களைத் கத்தார் அமீருக்கு தெரிவித்தார், கத்தார் அமீர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும், கத்தார் மக்கள் மேன்மேலும் முன்னேற்றம் மற்றும் செழிப்பு அடைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்துதல் குறித்த கத்தார் இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு.!