கத்தாரில் இன்று ஒரே நாளில் 609 பேர் மீது நடவடிக்கை.!

609 referred public prosecution
Pic: The Peninsula

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கத்தாரில் இன்று (28-02-2021) முகக்கவசம் அணிய தவறிய 545 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

மேலும், ஒரு வாகனத்தில் டிரைவர் உட்பட நான்கு பேருக்கு மேல் செல்ல அனுமதியில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

கத்தார் அமீருக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார் குவைத் அமீர்.!

உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை மீறி செயல்பட்ட காரணத்தால் 42 பேர் மீது அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 11 பேர் மீதும், EHTERAZ பயன்பாட்டை பதிவிறக்காத 11 நபர்கள் மீதும அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு  பொதுமக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்துதல் குறித்த கத்தார் இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு.!