கத்தார், இந்தியா இடையே அக்டோபர் மாதம் இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்.!

Air India express Flight schedule between india and Qatar
Pic: Twitter/India In Oman

வந்தே பாரத் திட்டத்தின் 7ஆம் கட்டத்தின் கீழ், அக்டோபர் மாதத்தில் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இந்த விமானங்களில் அட்டவணைப்படி, கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு நான்கு விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 6 பேர் கைது‌.!

கத்தாரில் இருந்து இயக்கப்படும் இந்த நான்கு விமானங்களும் தமிழகத்தின் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை அடைந்து பின்னரே சென்னை சென்றடையும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் இடையே போடப்பட்டுள்ள ஏர் பபுள் ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதேபோல் இந்தியாவில் இருந்து கத்தாருக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, அடுத்த மாதம் இந்தியாவில் இருந்து கத்தார் இயக்கப்படும் விமானங்களில் 4 விமானங்கள் தமிழகத்தில் இருந்து கத்தாருக்கு இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நான்கு விமானங்களும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் கடந்த மூன்று மாதங்களில் 4,300 கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றம்.!

கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் விமானங்கள்:

அக்டோபர் 02 – தோஹா To திருச்சி, திருச்சி To சென்னை.

அக்டோபர் 09 – தோஹா To திருச்சி, திருச்சி To சென்னை.

அக்டோபர் 16 – தோஹா To திருச்சி, திருச்சி To சென்னை.

அக்டோபர் 23 – தோஹா To திருச்சி, திருச்சி To சென்னை.

தமிழகத்தில் இருந்து கத்தார் இயக்கப்படும் விமானங்கள்:

அக்டோபர் 02 – சென்னை To தோஹா

அக்டோபர் 09 – சென்னை To தோஹா

அக்டோபர் 16 – சென்னை To தோஹா

அக்டோபர் 23 – சென்னை To தோஹா

Bookings open for phase 7 October schedule!India 🔄 Doha Book tickets on our website or through Call Centre/City…

Posted by Air India Express on Wednesday, 23 September 2020

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook

Twitter

Instagram

Telegram