கத்தாரில் ராணுவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா: அமீர் பங்கேற்பு.!

Amir attends graduation ceremony
Pic: Amiri Diwan

கத்தாரில் உள்ள அஹ்மத் பின் முஹம்மது (Ahmed Bin Mohammed) ராணுவக் கல்லூரியின் 16ம் தொகுதி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று (28-01-2021) காலை அதன் தலைமையகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில், கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி மற்றும் பிரதமரும், உள்துறை அமைச்சருமான HE ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சவுதி இளவரசி மரணம்: கத்தார் அமீர் உள்ளிட்டோர் இரங்கல்.!

இந்த விழாவில், பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், அமிரி காவலர் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் அஹ்மத் பின் முஹம்மது ராணுவக் கல்லூரியின் 16ம் தொகுதி மாணவர்களின் முதல் பதினொரு சிறந்த பட்டதாரிகளை கெளரவித்தார்.

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் கடத்த முயற்சி.!

இந்த விழாவின் இறுதியில், பதினாறாம் தொகுதி அதிகாரிகள் சத்தியப்பிரமாணம் செய்து கல்லூரி கீதத்தை நிகழ்த்தினார்கள்.