கத்தார் Mesaimeer Interchange-ல் புதிய பாதை திறப்பு.!

Ashghal to open new route at Mesaimeer Interchange
Pic: Ashghal

கத்தார் Ashghal, பொது போக்குவரத்து இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து, நேற்று (12-10-2020) தோஹா அதிவேக நெடுஞ்சாலையின் தெற்குப் பகுதியிலிருந்து E Ring சாலையை நோக்கி போக்குவரத்தை இணைக்கும் Mesaimeer Interchange-ல் புதிய பாதையை திறந்துள்ளது.

இந்த புதிய பாதை, இன்று (13-10-2020) முதல் பயன்பாட்டிற்கு வரும் என்றும், அல் வக்ரா மற்றும் Wukair-லிருந்து நுவைஜா (Nuaija) நோக்கி வரும் சாலை பயனர்களுக்கு இது நேரடி இணைப்பை வழங்கும் என Ashghal தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் கடந்த மாதத்தில் சுமார் 540 டன்‌ உள்ளூரில் விளைந்த காய்கறிகள் விற்பனை.!

மேலும், அல் துமாமா (Al Thumama), பழைய விமான நிலையம் மற்றும் நஜ்மா வீதிக்கு மாற்றாக இப்பகுதியில் போக்குவரத்து அழுத்தம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…