கத்தார் நாட்டில் நேற்று தோன்றிய நீல நிற நிலவு.!!

Blue Moon appeared Qatar
Photo: Jayan Orma

வானில் தோன்றும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான நீல நிற நிலவு கத்தாரில் நேற்று (31-10-2020) மாலை தென்பட்டது.  அக்டோபர் மாதத்தில் தோன்றும் முழு நிலவுகளில் இது இரண்டாவதாகும்.

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வரும் முழு நிலவு, நீல நிலவு அதாவது ப்ளூ மூன் என அழைக்கப்படுகிறது.

COVID-19: கத்தாரில் இன்று (நவ.01) ‌புதிதாக 164 பேர் பாதிப்பு.!

நீல நிறத்தில் நிலவு இல்லாவிட்டாலும், அதன் முழு வெளிச்சம் காரணமாக அவ்வாறு காணப்படும்.

பொதுவாக வருடத்திற்கு 12 முழு நிலவுகள் தோன்றும் ஆனால், இந்த வருடம் 13 முழு நிலவுகள் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது.

நீல நிற நிலவுகள் சராசரியாக 2.5 வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும், இந்த நீல நிற நிலவு கடைசியாக 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தோன்றியுள்ளது.

கத்தார் அல் வக்ராவில் நேற்று இந்த நீல நிற நிலவு தோன்றியதை Jayan Orma என்பவர் படம் பிடித்துள்ளார்.

இனி இந்த டிக்கெட் செல்லாது – தோஹா மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…