கத்தாரில் இன்று ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை.!

Corona update Qatar Nov 24
Pic: The Peninsula Qatar

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 227 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 212 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (24-11-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 137,642ஆக உள்ளது.

FIFA அமைப்பின் தலைவருடன் கத்தார் அமீர் சந்திப்பு.!

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 212 நோயாளிகள்  குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,698ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 10,745 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 1,088,913 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஏழு பேர் கைது‌.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…