கத்தார் வந்தடைந்தது COVID-19 தடுப்பு மருந்து; நாளை முதல் 7 சுகாதார மையங்களில் கிடைக்கும்.!

Covid-19 vaccination arrived Qatar
Pic: MoPH

கத்தாரில் நாளை (23-12-2020) புதன்கிழமை முதல் COVID-19 தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கும் என்று மூத்த அதிகாரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, நாளை முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்பில் உள்ள பெரியவர்கள், தொற்றுநோயால் பாதிக்கப்படும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நாள்பட்ட நோயால் கடுமையாக பாதிக்கப்படும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் வேக கேமராவை உடைக்க முயன்ற நபர் கைது.!

இந்த ஆரம்ப முன்னுரிமைகளை பூர்த்தி செய்யும் நோயாளிகள் தொலைபேசி அல்லது SMS மூலம் தொடர்பு கொண்டு தடுப்பூசிக்கு அவர்கள் தேர்வு செய்யப்படுவதை அறிவுறுத்தப்படும் என்றும், நியமிக்கப்பட்ட 7 சுகாதார மையங்களில் ஒன்றில் சந்திப்பில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி கிடைக்கும் ஏழு ஆரம்ப சுகாதார மையங்கள்:

  • Al Wajba சுகாதார மையம்
  • Leabaib சுகாதார மையம்
  • Al Ruwais சுகாதார மையம்
  • Umm Slal சுகாதார மையம்
  • Rawdat Al Khail சுகாதார மையம்
  • Al Thumama சுகாதார மையம்
  • Muaither சுகாதார மையம்

கத்தாரில் உள்ள அனைவருக்கும் 2021இல் தடுப்பூசி போடுவதற்கு எங்களிடம் போதுமான தடுப்பூசிகள் உள்ளது என Dr.Hamad Al-Rumaihi கூறியுள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…