தோஹா, ஷார்ஜா இடையே நேரடி விமான சேவைகள் தொடக்கம்.!

Doha Sharjah direct flights
Pic: Air Arabia

ஏர் அரேபியா (Air Arabia) விமான நிறுவனம் வருகின்ற (18-01-2021) முதல் ஷார்ஜா மற்றும் தோஹா இடையே தினசரி விமானங்களை இயக்க உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் COVID-19 தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி; MoPH மறுப்பு.!

இந்த விமானம் அமீரக நேரப்படி, மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு கத்தார் நேரப்படி மாலை 4:10 மணிக்கு தோஹாவில் தரையிறங்கும் என்றும், அங்கிருந்து திரும்பும் ஏர் அரேபியா விமானம் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு இரவு 7:10 மணிக்கு ஷார்ஜாவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் உலா ஒப்பந்தத்தில் வளைகுடா தலைவர்கள் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமீரகம் மற்றும் கத்தார் இடையே வான்வெளி எல்லைகளை மீண்டும் திறப்பதாகவும் மற்றும் விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதாகவும் கடந்த (09-01-2021) அன்று பொது சிவில் விமான ஆணையம் (GCAA) அறிவித்தது.

கத்தார், எகிப்து இடையே நேரடி‌ விமானங்களை இயக்க முடிவு.!

மேலும், அமீரகத்திலிருந்து கத்தார் செல்லும் முதல் விமானத்தை ஏர் அரேபியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது, அத்துடன் அல் உலா ஒப்பந்தத்திற்கு பின்னர், ஷார்ஜாவிலிருந்து தோஹாவுக்கு செல்லும் முதல் நேரடி விமானம் இதுவாகும்.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…