கத்தாரில் மசூதிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியீடு.!

follow precautionary measures mosques
Pic: The Peninsula

கத்தாரில் பிரார்த்தனை செய்வதற்காக மசூதிக்கு வருபவர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அவ்காஃப் (Awqaf) மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த வழிகளையும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க உங்களுக்கு நினைவூட்டுகிறோம் என அமைச்சகம் சமூக வலைத்தளத்தின் பதிவில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் பிப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அதிகரிப்பு..!

மசூதிக்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:

  • வீட்டிலேயே உளூச் செய்துவிட்டு வரவும்.
  • நுழைவாயிலில் EHTERAZ பயன்பாட்டை காண்பிக்க வேண்டும்.
  • நீங்கள் கையுறைகள் அணிந்து இருந்தாலும், கைகுலுக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • உங்கள் சொந்த பிரார்த்தனை பாயைக் கொண்டு வந்து நியமிக்கப்பட்ட இடங்களில் தொழ வேண்டும்.
  • நீங்கள் மசூதியில் இருக்கும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.
  • உங்களின் சொந்த குர்ஆனை கொண்டு வந்து படியுங்கள் அல்லது உங்கள் மொபைலில் உள்ள குர்ஆனைப் படியுங்கள்.

மேலும், இறைவன் அனைவரையும் பாதுகாத்து ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் வழங்கட்டும் என அமைச்சகம் பதிவின் இறுதியில் கூறியுள்ளது.

காசா பகுதிக்கு 360 மில்லியன் டாலர் நிதி மானியம் வழங்க கத்தார் அமீர் உத்தரவு.!