இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முதன் முறையாக இன்று கத்தார் வருகை.!

Foreign minister visit Qatar
Pic: Twitter/Dr. S.Jaishankar

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று (28-12-2020) கத்தார் நாட்டிற்கு வருகை தர உள்ளார்.

கத்தார் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகம்மது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்தானி அவர்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் கோர் பூங்கா நுழைவு டிக்கெட் இனி அல் மீரா கிளைகளில் கிடைக்கும்.!

முதன்முறையாக கத்தார் நாட்டிற்கு வரும்  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் கத்தார் COVID-19 தொற்றுநோயின்போது உயர்மட்ட தொடர்புகளை பராமரித்து வருகின்றன, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கடந்த சில மாதங்களில் மூன்று முறை தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

கத்தாரின் அல் வக்ரா சந்தையில் குறைந்த விலையில் மீன்கள்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…