கத்தார் உடனான உறவை மீட்டெடுக்க நான்கு நாடுகள் ஒப்புதல்; விரைவில் விமானங்களும் அனுமதி.!

four countries restore ties
Pic: @spagov

சவுதி அரேபியாவில் நேற்று (05-01-2021) நடைபெற்ற 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டிற்கு பின்னர், ஊடகங்களுக்கு உரையாற்றிய சவுதி வெளியுறவு அமைச்சர் விமானங்களை தொடங்குவது உட்பட கத்தார் நாட்டுடனான உறவை மீட்டெடுக்க நான்கு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த உச்சிமாநாடு மூலம் கத்தார் உடனான மோதல்கள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்தது என்றும், இராஜதந்திர உறவுகள் முழுமையாக திரும்பியது என்றும் சவுதி வெளியுறவு அமைச்சர் Faisal bin Farhan Al-Saud செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

வளைகுடா நாடுகளின் ஒற்றுமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட GCC தலைவர்கள்.!

இந்த ஒப்பந்தம் கத்தார் மற்றும் நான்கு நாடுகளுக்கு இடையிலான முழு உறவை மீட்டெடுக்கிறது என்றும், நிலுவையில் உள்ள அனைத்து சிக்கல்களும் இயல்பு நிலைக்கு மாறும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக  சவுதி வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விமானங்களை மீண்டும் தொடங்குவது மற்றும் பிற உறவுகளை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தத்தை செயல்படுத்த உத்திரவாதம் அளிக்க அரசியல் விருப்பமும் நல்ல நம்பிக்கையும் உள்ளது என சவுதி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எகிப்து உட்பட வளைகுடா அரபு நாடுகளின் கூட்டத்திற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விமானங்களை மீண்டும் தொடங்குவது உட்பட இராஜதந்திர மற்றும் பிற உறவுகளை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தத்தை அமல்படுத்த உத்தரவாதம் அளிக்க அரசியல் விருப்பமும் நல்ல நம்பிக்கையும் இருப்பதாக சவுதி வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) பொதுச்செயலாளர் Nayef Falah al Hajraf அவர்கள் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

கத்தார் அமீருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த குவைத் அமீர்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…