கத்தாரில் சர்வதேச அரேபியன் குதிரை விழா துவக்கம்.!

International Arabian Horse Festival
Pic: Katara

கத்தாரில் சர்வதேச அரேபியன் குதிரை விழா (KIAHF) கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்கள் ஆதரவின் கீழ், நேற்று (02-02-2021) முதல் தொடங்கியுள்ளது.

இந்த விழா கட்டாராவின் எஸ்ப்ளேனேட் (esplanade) பகுதியில் நடைபெற்று வருகிறது, இந்த விழாவை கத்தார் அறக்கட்டளை, கத்தார் குதிரையேற்ற கூட்டமைப்பு, கத்தார் பந்தய மற்றும் குதிரையேற்ற கிளப் (Qatar Racing & Equestrian Club) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பிப்ரவரி 6ம் தேதி வரை நடத்த கட்டாரா ஏற்பாடு செய்துள்ளது.

கத்தாரில் மூடுபனி ஏற்படுவதற்கான வாய்ப்பு; QMD எச்சரிக்கை.!

இந்த விழாவில் அரேபிய குதிரைகள் பற்றிய பல்வேறு படைப்புகளின் கலைகள், புத்தகங்கள், புகைப்படம் எடுத்தல் மற்றும் முத்திரை கண்காட்சிகள், 3D விளையாட்டுகள் மற்றும் குதிரை சாடில்ஸ் (saddles) வரைதல் போன்றவை இடம்பெற்றுள்ளது.

இந்த விழாவில் சாம்பியன்ஷிப்பை வென்ற குதிரைக்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் மூன்று முறை QR 3,000,000 ‘Legend’ விருது வழங்கப்படும் என நிகழ்ச்சியின் மேலாளர் Mohamed al-Darwish தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட 20 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு சவுதி அரேபியா தற்காலிக தடை.!

மேலும், தகுதிச் சுற்றுகள் பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறும் என்றும், சாம்பியன்ஷிப் சுற்று பிப்ரவரி 6ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.