கத்தார் அமீருக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார் குவைத் அமீர்.!

Kuwait amir send message
pic : Amiri Diwan

குவைத் அமீர் HH ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களுக்கு இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் உண்டான வழிகள் குறித்த எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார்.

கத்தாரில் இன்று இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி.!

குவைத் வெளியுறவு அமைச்சர் HE ஷேக் Dr.அஹ்மத் நாசர் அல் முஹம்மத் அல் சபா அவர்கள் நேற்று (30-12-2020) புதன்கிழமை காலை அமிரி திவான் அலுவலகத்தில் கத்தார் அமீருடனான சந்திப்பின் போது இந்த எழுத்துப்பூர்வ செய்தியை வழங்கினார்.

இந்தியா, கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகள் ஜனவரி 31, 2021 வரை நீட்டிப்பு.!

இந்த சந்திப்பின் தொடக்கத்தில், குவைத் வெளியுறவு அமைச்சர் HE ஷேக் Dr.அஹ்மத் நாசர் அல் முஹம்மத் அல் சபா அவர்கள் குவைத் அமீரின் வாழ்த்துக்களை கத்தார் அமீருக்கு தெரிவித்தார், மற்றும் கத்தார் நாட்டு மக்கள் மென்மேலும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர், கத்தார் அமீர் அவர்கள் குவைத் வெளியுறவு அமைச்சரிடம், குவைத் அமீர் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்தினார், மற்றும் குவைத் நாட்டு மக்கள் மென்மேலும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…