கத்தார் மெட்ரோலிங்க் M110 பேருந்து சில நிறுத்தங்களில் அதன் சேவையை நிறுத்தி வைத்துள்ளது.!

M110 metrolink to stop servicing few bus stops on route
Pic: Twitter/Qatar News

கத்தாரில் உள்ள Legtaifiya மெட்ரோ நிலையத்திலிருந்து தி பேர்ல் (The Pearl) வரை இயங்கும் மெட்ரோலிங்க் M110 பேருந்து சேவைகள் சில பேருந்து நிறுத்தங்களுக்கு சேவை செய்வதை நிறுத்தி வைத்துள்ளதாக Mowasalat Qatar அறிவித்துள்ளது.

66109 (Tower 9), 66111 (Medina Centrale), 66113 (Tower 24), and 66115 (Tower 27) ஆகிய பேருந்து நிறுத்தங்களில் மெட்ரோலிங்க் M110 பேருந்து சேவைகள் வழங்கப்படாது என Mowasalat Qatar தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் தனது மூன்றாவது உதவி விமானத்தை அனுப்பி வைத்தது.!!

மேலும், இந்த முடிவானது செப்டம்பர் 24ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…