கத்தாரில் இன்று பல்வேறு அமைச்சகங்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு.!

Ministries hold press conference
Pic: QNA

கத்தார் தொலைக்காட்சியில் (Qatar Television) இன்று (03-02-2021) பல்வேறு அமைச்சகங்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

கத்தார் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணி அளவில் சமூக தொலைதூர நிகழ்ச்சியின் (Social Distance programme) போது பொது சுகாதார அமைச்சகம் (MoPH), உள்துறை அமைச்சகம் (MoI) மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MoCI) ஆகியவற்றின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பு செய்யப்படும் என கத்தார் தொலைக்காட்சி ட்வீட்டரில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள பிரபல மருந்தகத்தின் புதிய கிளை திறப்பு.!

இந்த நிகழ்ச்சியில், COVID-19 தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் கடந்த வியாழக்கிழமை அன்று MoPH-ன் மூத்த அதிகாரிகள் இதே நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.

கத்தார், இந்தியா இடையே நான்காவது வெளியுறவு அலுவலக ஆலோசனை கூட்டம்.!

மேலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவுவது, கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது மற்றும் COVID-19ன் இரண்டாம் அலைகளைத் தவிர்ப்பது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.