கத்தாரில் அடுத்த 10 நாட்களில் மார்டனா தடுப்பூசி.!

Moderna Covid-19 vaccine arrive
Pic: Reuters

அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா உருவாக்கிய COVID-19 தடுப்பூசியின் முதல் தொகுதி அடுத்த பத்து நாட்களில் கத்தார் வந்தடையும் என தேசிய தொற்று ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவரும், பொது சுகாதார அமைச்சகத்தின் சுகாதார பாதுகாப்பு மற்றும் தொற்று நோய்களின் இயக்குநருமான Dr. Hamad Al Romaihi தெரிவித்துள்ளார்.

Moderna மற்றும் Pfizer-BioNTech தடுப்பூசிகளின் வழக்கமான விநியோகம் வருகின்ற மார்ச் மாத தொடக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று Dr. Al Romaihi கூறியுள்ளார்.

தோஹாவில் புதிய வடிவிலான மின் கம்பங்களை அமைக்க Ashghal கையெழுத்து.!

COVID-19 தடுப்பூசியின் செயல்திறன்மிக்க அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றும், Moderna மற்றும் Pfizer-BioNTech நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகின்ற மார்ச் மாதம் முதல் அதிகளவில் தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும், எங்கள் வெளியீட்டை பெரிதும் விரிவுபடுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

சவுதி இளவரசி மரணம்: கத்தார் அமீர் உள்ளிட்டோர் இரங்கல்.!