COVID-19: கத்தாரில் இன்று ‌(செப் 30) புதிதாக 227 பேர் பாதிப்பு.!

Corona update Qatar Feb27
Pic: iloveqatar.net

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 227 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 251 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (30-09-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 125,760ஆக உள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இன்று பிற்பகல் ‌இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை.!

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 251 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,699ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 5,701 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 7,75,914 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குவைத் அமீர் மறைவு: கத்தாரில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…