கத்தாரில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் COVID-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்; MoPH

MoPH to provide COVID-19 vaccine free of cost to all residents
Pic: QNA

COVID-19-க்கான தேசிய மூலோபாயக் குழுவின் தலைவரும், ஹமாத் மருத்துவக் நிறுவனத்தின் தொற்று நோய்கள் பிரிவின் தலைவருமான Dr. Abdullatif Al Khal கூறுகையில், கத்தார் நாட்டில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் COVID-19 தடுப்பூசி இலவசமாக கிடைக்க பொது சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

போதுமான அளவு தடுப்பூசி வழங்க அமைச்சகம் உறுதி செய்யும் என்றும், உலகம் முழுவதிலும் இருந்து அதிக தேவை இருப்பதால் ஆரம்பத்தில் அனைவருக்கும் வழங்க முடியாது, எனவே வாரங்கள் மற்றும் மாதங்களுக்குள் தடுப்பூசி வழங்கப்படும் என கத்தார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் Dr. Al Khal கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கத்தார் WOQOD தனது 106வது‌‌ பெட்ரோல் நிலையத்தை திறந்துள்ளது.!

தடுப்பூசி ஒரு தனிநபரின் ஆரோக்கியம், சமூகம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு முக்கியமானது என்பதால் இலவசமாக வழங்கப்படும் என Dr. Al Khal கூறினார்.

மேலும், கத்தார் COVID-19 தடுப்பூசியை விரைவாகவும், சாத்தியமான அளவிலும் வழங்க ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து COVID-19 தடுப்பூசிகளை வாங்கும் என்றார்.

உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புடன், COVID-19 தடுப்பூசி குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…