கத்தார் நாட்டிற்கு வந்தடைந்தார் பாலஸ்தீன அதிபர்; அமீருடன் இன்று சந்திப்பு.!

Palestinian President arrives Doha
Pic: The Peninsula

பாலஸ்தீன நாட்டின் அதிபர் HE மஹ்மூத் அப்பாஸ் அவர்கள் நேற்று (13-12-2020) கத்தார் தலைநகர் தோஹாவுக்கு வருகை தந்தார்.

தோஹா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பாலஸ்தீன அதிபர் HE மஹ்மூத் அப்பாஸ் மற்றும் அவருடன் வந்த தூதுக்குழுவையும், வெளிநாட்டு விவகாரத்துறை அமைச்சர் HE Sultan bin Saad Al Muraikhi மற்றும் கத்தார் நாட்டிற்கான பாலஸ்தீன தூதர் HE Munir Ghannam  ஆகியோர் வரவேற்றனர்.

தொழிலாளர் தங்குமிடங்களில் ஆய்வு பிரச்சாரம் தொடக்கம்.!

கத்தார் நாட்டிற்கு வருகை தந்ததுள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்களுடன் கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (14-12-2020) சந்திக்கவுள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் (QNA) நேற்று தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில், பாலஸ்தீனத்தின் சமீபத்திய முன்னேற்றங்களுக்கு மேலதிகமாக, கத்தார் அமீர் மற்றும் பாலஸ்தீன அதிபர் இருவரும், இரு சகோதர நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் அவற்றை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் உண்டான வழிகள் குறித்து விவாதிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் Karwa டாக்சிகளில் Google Pay மற்றும் Apple Pay சேவைகள் அறிமுகம்.!

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…